man 226புதிய
முகங்களை
பார்க்கும் போதெல்லாம்
பழைய குரூரங்கள்
ஆள் ஆளுக்குள்
அப்பிக்கிடக்கிறது!

சலவை செய்து
போட்டாலும்
மனச்சாளரத்தைத்
தாண்டி
அழுக்கு உடையாகிறது
ஆளற்ற மனம்!

வழிதவறி
கால்கள் இடறுண்ட கணம்
வழியை மறந்து
ஒரு மனிதவாசனையை
நுகரும் கண்ணில்
வந்து விழும்
மனிதன்
கடவுளாக அவதரிக்கிறான்!

எதிர்பாராத
நொடியில்
வீதியில் விழுந்த
வழிப்போக்கனை
தூக்கி மடிமீது
சாத்தும்
இளம்பெண்ணொருத்தி
தாய்மைக்கான
அடையாளத்தை
விட்டுச் செல்கிறாள்!

ஒருவர்
கண்ணீர் சிந்தும்போது
சொற்களை
கொண்டு துடைக்கும்
அகன்ற வார்த்தைகளில்
பழைய சுவரில்
புதிய பூச்சுக்கலவையாய்!....

- ஜெ.ஈழநிலவன்

Pin It