விதைகளோ வேர்களோ இன்றி
நம்மிடையில் கிளைத்து
முளைத்திருக்கும் மௌனத்தினை
எப்பொழுதிருவரும் பிடுங்கிக் கழற்றி
காலத்தின் கருந்துளைகளுக்குள்
தூக்கி எறியப்போகிறோம்
பிடுங்கிய குழிகளில்
செழித்து வளரவென
காதல் வார்த்தைகளை
எப்போதடி நடப்போகிறோம்
திமிர் பிடித்துக் கொழுத்து
மதில்கள் மேல் ஓசையின்றி நடக்கும்
தெருப்பூனைகளைப் போல
தனிமையில் தத்தளிக்கும்
இதயம் கொதித்து துடிக்கத் துடிக்க
உன்னைத் தேடியே
ஆவியையும்
இவ்வாறான கேள்விகளையும்
ஒன்றாக அனுப்புகிறது
உன்னாடை விசிறலில்
அதனைக் குளிர்வித்தும்
தீராததும் மாறாததுமான
காதல் வெப்பத்தை
என்ன செய்யப்போகிறாய் நீ
- எம்.ரிஷான் ஷெரீப் (