sun light

ஒரு பகல் என்பது...
வெயில் ஏந்தியலைகிற வேளை!

ஒரு பகல் என்பது...
எப்போதோ பெய்கிற மழைக்கால இருட்டு!

ஒரு  பகல் என்பது...
பள்ளிக்குழந்தையின் சின்னசிறைச்சாலை!

ஒரு பகல் என்பது...
எங்கோர் மூலையில் காதல் முகிழ்தருணம்!

ஒரு பகல் என்பது ...
எவரோ ஒருவரின் பிணமெரியும் நேரம்!

ஒரு பகல் என்பது...
நோய்க்காலத்து அவஸ்தை!

ஒரு பகல் என்பது ...
அறிவின் தேடல் நேரம்!

ஒரு பகல் என்பது....
அன்றைய நாளைச் சுமப்பது!

ஒரு பகல் என்பது....
தூக்கமற்ற இரவின் தொடர்ச்சி!

ஒரு பகல் என்பது...
பயணத்தின் பொழுது!

ஒரு பகல் என்பது ....
பரபரப்பிற்கான தருணம்!

ஒரு பகல் என்பது...
பிழைப்புக்கான ஓட்டம்!

ஒரு பகல் என்பது...
காற்றோடு பேசித்திரிவது!

ஒரு பகல் என்பது...
கவிதை படிக்கும் காலம்!

ஒரு பகல் என்பது...
இரவின் திரை!

ஒரு பகல் என்பது...
பேறுகாலப்பெண்ணின் பெரு அவஸ்தை!

எனக்கு  பகல் என்பது 
உன் நினைவு!

- இசைமலர்

Pin It