சிறுபிள்ளைகளுக்கென
மாலையில் பெய்கிறது மழை.
தூறல்களை சிதறடித்தபடி
பள்ளியில் இருந்து
ஓடி வருகிறாள் ஸிண்ட்ரெல்லா
மழைக்கவச உடையுடன்.

நனைந்துகொண்டிருக்கும் நாய்க்குட்டிக்கு
சாப்பாட்டு கூடையை குடையாக்குகிறாள்
இன்னும் வேகமாக விளையாட வருகிறது மழை

பின்னால் வரும் அண்ணன்
நாய்க்குட்டியை உதறிவிட்டு கூடையை
எடுத்துவருகிறான்.
சட்டென நிற்கிறது மழை.

- ஜனா.கே

Pin It