கீற்றில் தேட...

death sentenceசொர்க்கத்தின் ஆச்சரிய வனம் தவிர்த்து
நரகத்தின் பாலை வழிப் பயணித்து,
நமக்குப் பொருத்தமானதாய்,
மற்றவரைவிடச் சிறந்தததாய்,
விலை உயர்ந்ததாய்,
பார்ப்போரை சுண்டி இழுக்கும் வண்ணத்தில்
ஒரு தூக்குக் கயிறைத் தேர்ந்தெடுத்து,
சுருக்கிட்டுத் தொங்குவதை
வாழ்க்கை என்று நம்பிக் கொண்டிருக்கிறோம்!

- சேயோன் யாழ்வேந்தன்