ghost houseகீழத் தெரு
நாச்சி முத்துக் கவுண்டரின்
இரண்டாம் நம்பர் வீட்டில்
தூக்கு மாட்டிச் செத்த
இளவயது பொன்னாத்தா
நடுச் சாமங்களில் பேயாய்த் திரிவதாய்
ஆளுக்கொரு கதையை
அண்டை வீட்டுக்காரர்கள்
அவிழ்த்துக் கொண்டிருக்க
அரை வாடகைக்கும் கூட
ஆள் வராமல்
தவித்துப் போனார்
நாச்சி முத்துக் கவுண்டர்
எங்கேயோ எப்படியோ பேசி
குடியமர்த்தி விட்டிருந்த
பானிப் பூரி விற்கும்
நான்கு வட நாட்டவரிடம்
அப்பேய் பற்றி
மக்கள் கேட்டு வைக்க
ராத்திரி நேரங்களில்
வீட்டு முச்சந்தியில் ஒரு பெண்
இந்தியில் உளறிக் கொண்டிருப்பதாக
அவர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள்
கால் காசு வாடகைக்காக.

- எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

More articles by எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

Comments

1 comment

1
krishna
எளிமையான அருமையான யதார்த்த கவிதை தோழரே.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.