girl painting

நீண்ட நெடிய மரமொன்றின்
மிகப் பெரிய கிளையில்
ஒரு மஞ்சள் நிற ஆப்பிளையும்
அதற்கு அடுத்ததாய்
கொஞ்சம் வளைந்தவாறு
இருந்த ஒரு
சின்னக் கிளையில்
நான்கோ ஐந்தோ
ஆரஞ்சுப் பழங்களையும்
அதற்கும் அடுத்து
இலைகள் இல்லாத
கிளையொன்றில்
சில வெண்டைக்காய்களையும்
கீழ்நோக்கித் தொங்கிக் கொண்டிருந்த
கடைசிக் கிளையில்
ஒரு வெள்ளை நிற
டெடி பியரையும்
தொங்க விட்டிருந்தாள்
பூஜாக் குட்டி
அவளின் ஓவியப் புத்தகத்தில்...

- கிருத்திகா தாஸ்

More articles by கிருத்திகா தாஸ்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.