விண்ணுயர் அளவில் அறிவில் உயரினும்

மண்ணில் தனியொரு மனிதனாய் இருந்து

எண்ணுவ தெதையும் செய்திட இயலாது

உண்மையில் அறிவு பயன்பட வேண்டின்

பண்புடை உழைப்பவர் துணைகொள் வீரே

(விண்ணுயர் அளவிற்கு அறிவில் உயர்ந்து இருந்தாலும் எந்த ஒரு தனி மனிதனாலும் இம்மண்ணில் தான் நினைப்பதை எல்லாம் தனியாய் இருந்து செய்து விட முடியாது. (தன்னுடைய) அறிவு உண்மையாகப் பயன்பட வேண்டும் என்று நினைத்தால் (அவர்கள்) பண்புடைய உழைக்கும் வர்க்கத்தினரின் துணையைக் கொள்ள வேண்டும்.)

Comments

1 comment

1
வீரா பாலு
அருமை

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.