உண்ணவும் உடுக்கவும் மட்டும் அன்றி

எண்ணத்தில் விரும்பும் நலன்கள் யாவும்

மண்ணில் வாழும் மனிதர்கள் யாவரும்

திண்மையாய்ப் பெற்றிடும்அளவிற்கும் மேலாய்

பொருட்களைப் படைத்து நிரப்பிய போதிலும்

ஒருவர்க்கும் வேலை இல்லை என்னாது

அளித்திடும் சமதர்ம அரசு இலையெனில்

துளியள வேனும் நிம்மதி இராதே

(உண்பதற்கும், உடுப்பதற்கும் மட்டும் அல்லாது (மனிதர்கள் தங்கள்) எண்ணத்தில் விரும்பும் நலன்களை எல்லாம் நிச்சயமாகப் பெறுவதற்குத் தேவைப்படும் அளவை விட அதிகமான பொருட்களைப் படைத்து நிரப்பிய போதிலும், யாருக்கும் வேலை இல்லை எனறு சொல்லாத சோஷலிச அரசு இல்லை என்றால் யாருக்கும் ஒரு துளியும் நிம்மதி இருக்காது.)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.