கீற்றில் தேட...

ஒரு
ஆப்பிள் பழத்தின் மேல்
பச்சை நிறத்தில்
பட்டாம்பூச்சி ஒன்று
ஒட்டிக் கொண்டிருந்தது...

மின்மினிப் பூச்சிகள்
பூக்களெனப் பூத்திருந்தன
வயலட் நிறச்
செடிகளுக்கு நடுவே...

தண்டவாளப் பூவொன்றைச்
சிதைத்து விடாமல்
சற்றே வளைந்தவாறு
நகர்ந்து சென்றிருந்தது
அந்த ரயில்...

நட்சத்திர வானத்தில்
மழை பெய்து
கொண்டிருந்தது
அந்த இரவில்...

அதற்கும்
அடுத்த பக்கத்தில்

ஆரஞ்சு நிறச் சூரியன்
கண் சிமிட்டிச்
சிரித்துக் கொண்டிருந்தது,
அந்தக் குழந்தை
வரைந்து கொண்டிருந்த
ஓவியப் புத்தகத்தில்...

- கிருத்திகா தாஸ்