நீயும் நானும் உறவு முறித்து
ஒரு திங்கள் கடந்து விட்டது
அமாவாசை மையிருட்டு நேற்று,
இன்று வான் பூமியில் துளிர்த்து
விட்டது நிலவு
வளர்ச்சிக்கான ஆரம்ப படிக்கட்டுகளில் ...
நாளை தொடங்கும் மென்வளர்ச்சி
முற்று பதினைந்து தின முடிவில்
பால் நிலா பார்க்கும் பொழுதிலோர்
பரவசம் மனதில் ....
மறுநாளே தேயத் தொடங்கத்தான்
இவ் ஒளிப்பிரளயம் ...
மீண்டும் முழு மலர் வாசம்,
சுழற்சியெல்லாம் சரியாகத்தான் நடக்கிறது...
உறவு முறித்த சுவடுகள் இதில்
எங்குமில்லை.
கீற்றில் தேட...
உறவு முறித்த சுவடுகள்
- விவரங்கள்
- பத்மாகிரஹம்
- பிரிவு: கவிதைகள்