உன்னுடன் நான்
மகிழ்ந்திருக்க வேண்டுமென
நான் வேண்டாத பலவற்றையும்
எனக்காக வலிந்து
நிறைவேற்றுகின்றாய் நீ
என் எதிர்பார்ப்பை
நன்கு அறிந்திருந்தும் அதனை
மட்டும் மீதி வைத்துவிட்டு
நான் வேண்டாத பலவற்றையும்
எனக்காக வலிந்து
நிறைவேற்றுகின்றாய் நீ
இப்பொழுதும் என் மீதான
உனது முழுமை பெறாத
காதலை சுட்டிக்காட்டினால்
நீ என்ன ஒத்துக் கொள்ளவா
போகிறாய்..?
- அருண் காந்தி(