காற்றின் திசையில் மேலெழும்பிய
காகிதமொன்று தன்னிலை தாழாமல்
தொடர்ந்து பயணிக்கிறது வெளியில்
காற்று நிரம்பிய அதன் உடலில்
இறகுகள் முளைக்க மெல்ல
பறவையாகிக் கொண்டிருக்கிறது
காகிதம்
இதற்கு முன்னரும் இப்படித்தான்
அந்த குப்பை மேட்டிலிருந்து புறப்பட்ட
பல காகிதங்கள் பறவையாய் மாறி
மேற்குவாக்கில் பறந்து போயின
ஆனால் இப்படி வேறெந்த
காகிதமும் சிறகுகள் முளைக்கும்
முன்னர் தன்னிலை குலைந்து
குப்பை மேட்டில் மீண்டும் வீழ்ந்ததில்லை
இரை தேடலும் இளைப்பாறலும்
ஒருபுறம் இருக்கட்டும்
பறத்தலின் சுகத்திற்கென மீண்டும்
மேலெழும்பக் காத்திருக்கிறது
காகிதப் பறவை
- அருண் காந்தி (