கீற்றில் தேட...

கவலை
_____
நமக்குப் பிடிக்குமா
என்பதை விட
பிறருக்குப் பிடிக்குமா என்பதுதான்
நமது பெரிய கவலை.

சோட்டா பீம்
_______________
சோட்டாபீமின் சாதனைகளில்
மகத்தானது
குழந்தைகளுக்கு சோறூட்டுவது.

ஆத்திரம்

அப்பாவின் அதட்டுதலிற்காய்
புத்தகம் திறக்கையில்
மரங்களை நட்ட
அசோகர் மீதெல்லாம்
கோபம் வருகிறது.

- எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ