பின் யாமங்களில்
மரங்களின் உச்சியிலிருந்து
கொட்டிக் கொண்டிருக்கிறது
மழை...
கேட்பார் யாருமில்லை...
ஒழுகும் மழை
ஓய்வதாயில்லை...
புரளும் வெள்ளம்
என் வாசலையும்
நனைத்தபடி
நகர்கிறது...
கையில் சிறு
காகிதக் கப்பலுடன்
இன்னும்
வாசலிலேயே
நின்றுகொண்டிருக்கிறேன்...
- தனி (
கீற்றில் தேட...
காகிதக் கப்பலுடன்
- விவரங்கள்
- தனி
- பிரிவு: கவிதைகள்