அந்த காலைப் பொழுதில்
தெருவில் மௌனமாய்
கூடியிருந்தவர்களின் நடுவே
பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருக்கிறான்
ஓவியன் ஒருவன்
அயர்ந்த முகமும் அவனைச் சுற்றிலுமான
மூட்டை முடிச்சுகளும் அவனது தொலைதூரப்
பயணத்தை உறுதி செய்தன
அமைதியாய் பார்த்துக் கொண்டிருக்கிறது
அவனது கோடுகள் புலப்படாத கூட்டம்
கரைந்து கிடக்கின்றன
கரிக்கோல்களும் நிறக்கோல்களும்
அவனைச் சுற்றிலும்
வெகுநேரம் தேடி இறுதியாய்
வெளிர் நீலத்தைக் கண்டெடுத்தவன்
ஓவியத்தை நிறைவு செய்யும் முன்னர்
சலசலப்புடன் கரைந்து கொண்டிருக்கிறது
வேடிக்கை மனிதக் கூட்டம்
- அருண் காந்தி (