கீற்றில் தேட...

காகிதப் பைகளுக்கு 40000 மரங்களும்
மெல்லிய காகிதத்திற்கு 27000 மரங்களும்
வெட்டப்பட்டிருக்கலாம்.
200 வகையான அரிய தாவரங்களோ
பறவைகளோ கூட காணாமல் போயிருக்கலாம்.
17250 வலைதளங்கள் கையாடப்பட்டிருக்கலாம்.
புற்று நோயால் 2880 மனிதர்கள் இறந்திருக்கலாம்.
300000 பேர்கள் ட்விட்டரிலும்
700000 முக நூலிலும் கணக்கை
ஆரம்பித்து  இருக்கலாம்.
குறைந்த பட்சம்
ஒரு ஈசலின் வாழ்நாளாக்கூட  இருக்கலாம்.
அத்துடன் இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்
பொய்த்துப்போன பருவங்களாலும்,
குரல்வளையை நெறிக்கும்
கடன் சுமைகளாலும்
விதர்பாவில் மூன்று விவசாயிகள்
தற்கொலையும் செய்திருக்கலாம்
என்ற கசப்பான உண்மையை.