வன்புணர்ச்சியாலோ
பகடிச் சித்திரவதையாலோ
உயர்சாதிப் பெண்கள் கொல்லப்பட்டால்
கொதித்தெழும் பாரதமாதாஜி
பறச்சியோ
பள்ளச்சியோ
சக்கிலிச்சியோ
பழங்குடிப் பெண்ணோ
நடுவீதியில் நிர்வாணமாக்கப்பட்டு
யோனியில் உதைக்கப்பட்டாலோ
கூட்டுவன்புணர்ச்சியில் கொல்லப்பட்டாலோ
சலனமற்று வேடிக்கை பார்த்தபடி கிடக்கிறாள்.
அவளுக்குத் தெரிந்திருக்கிறது
பெண்தானென்றாலும்
யார்வீட்டுப் பெண்ணென்று.
கீற்றில் தேட...
பாரதமாதாஜிக்குத் தெரியும்
- விவரங்கள்
- யாழினி முனுசாமி
- பிரிவு: கவிதைகள்