உன்னைக் குறித்தான என் கனவுகளை
உன்னிடம் பகிர்கையில்-
நான்
அதீதத்தின் விளிம்பு பிடித்துத் தொங்குவதாய்
பரிகசிக்கிறாய் நீ.
எப்போதேனும்-
உன் நிராகரிப்பில் பெருகும்
என் கண்ணீர்த் துளிகளை
சோகத்தின் அதீதம் என
புறக்கணிக்கிறாய்.
நம் அன்பின் மிகுதியில்-
உனக்கான வேலைகளைப் பகிர்கையில்
அன்பின் அதீதம் எனக் கேலி செய்கிறாய்.
நாம்
காதலித்த நாட்களைப் போலவே
எளிமையாய்த்தான் இருக்கிறேன் இப்பொழுதும்.
என்றாலும்-
உனக்குள் முளைத்துவிட்ட
இந்த அதீதத்தின் வீக்கங்களைத்தான்
எப்படி உடைப்பதெனத் தெரியவில்லை எனக்கு.