வினைஞர் அரசைச் சோவியத்து ஒன்றியம்
முனைந்து அமைக்கையில் உதவிடா போதிலும்
பொதுமைத் தத்துவம் ஏற்றிடா நிலையிலும்
புதுமை இரும்புத் தொழில்நுட்பம் தன்னை
வளரும் இந்தியா வளம்பெற விரும்பி
உளமாரத் தந்த ஸ்டாலினைப் போற்றுவோம்

(சோவியத் ஒன்றியம் (புரட்சியின் மூலம்) தொழிலளர்களின் அரசை அமைக்க முயன்று கொண்டு இருந்த பொழுது எந்த உதவியும் செய்யாத போதும், (அத்தகைய அரசின் கொள்கையான) பொதுவுடைமைத் தத்துவத்தை ஏற்காத நிலையிலும், (ஆங்கிலேயர்கள் வெளியேறிய பின்) வளரும் நிலையில் இருந்த இந்திய நாடு, வளம் பெற வேண்டும் என்பதற்காக (எந்தவிதமான பிரதி பலனையும் எதிர்பாராமல்) புதுமையான இரும்புத் தொழில் நுட்பத்தை உளமாரத் தந்த ஸ்டாலினைப் போற்றுவோம்)

- இராமியா

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.