சூழ்ந்திருக்கும்
மேகத்திரைகளை விலக்கி
எனக்கான வானங்களுக்குள்
பயணிக்கிறேன்...
பறக்கப் பறக்க
ஆழங்களுடன் விரிகிறது
என் வானம்...
ஆகாயம்தாண்டிப் பறப்பதன்
தயக்கங்கள் ஏதுமின்றி
நீள்கிறது என் சிறகு...
இளைப்பாறுதலின் தேவைகள்
எதுவுமில்லை...
அதற்கு இடமுமில்லை...
எனக்கான
என் தனிமையுடன்
பால்வெளிகள் தாண்டிப்
பறக்கிறது என் சிறகு...
- தனி (
கீற்றில் தேட...
பால்வெளிகள் தாண்டி
- விவரங்கள்
- தனி
- பிரிவு: கவிதைகள்