நிழல்
அந்த உச்சி வெயில் நேரத்தில்
ஒற்றைக்குடையின் கீழ்
நாம் நின்று கொண்டிருக்கையில்
தோன்றிய ஒற்றை நிழல் தான்
இத்தனை நெருக்கமாய்
சேர்த்துப்பார்த்தது
முதல் முதல் நம்மை...
காதல்
மெல்ல விரலசைத்துவிட்டு
விலகிப்போகிறாய்
நம் மனம் மட்டும்
நின்று கொண்டேயிருக்கிறது
அந்த புகைவண்டி நிலையத்திலேயே...
கீற்றில் தேட...
நிழல்
- விவரங்கள்
- பாரி மைந்தன்
- பிரிவு: கவிதைகள்