கொடியில் கிடந்த
துணிகளில்
எச்சமிடும் காக்கைகள்
அறிவதில்லை
அது யாருடைய
உள்ளாடையென்று
பிணமாகக் கிடக்கும்
தாயின்
முலையைத் தேடும் குழந்தை
சிலைகளெல்லாம்
ஏன் உயிர்ப்பலி கேட்கிறது
பாதாள அறைகளில்
பொக்கிஷங்கள்
கடன் தொல்லையால்
தற்கொலை செய்து கொள்ளும்
ஏழை விவசாயிகள்
வெள்ளை உடைகளில்
ஒளிந்திருக்கிறார்கள்
ஊழல் கறை
படிந்தவர்கள்
காந்தி தேசத்தில் தான்
துப்பாக்கிச் சத்தம்
அதிகமாய்க் கேட்கிறது.
கீற்றில் தேட...
ஆகமம்
- விவரங்கள்
- ப.மதியழகன்
- பிரிவு: கவிதைகள்