எனக்குப் பிடித்த ஒன்றை
உங்களுக்குப் பிடிக்குமா
என கேட்கும்போது
நிராகரிக்க முடியாமல்
விரும்பியது போல் செய்யும்
உங்கள் புன்னகைக்குப் பின்
நிழலாடுகிறது
உங்கள் விருப்பமின்மையின் வீச்சம்…
கீற்றில் தேட...
விருப்பமின்மை
- விவரங்கள்
- மா.செ.சரவணன்
- பிரிவு: கவிதைகள்