1.மடங்கிய பக்கத்தில்
உடையும் பட்டாம்பூச்சி
என்ன வாசித்திருக்கும்
கடைசி கணத்தில்
********************************************************************
2.பறவைகள் கடந்து போன
சுவடுகள் ஏதுமின்றி
ஆகாயம்
**********************************************************************
3.சுவரிலாச் சித்திரமாய்
மிதக்கிறது வண்ணத்துப்பூச்சி
வரைந்தவன் பெயரை
காற்றிலெழுதிக்கொண்டு
- நடராஜன் சுப்பிரமணியன் (natarajan_