நம் முத்தங்களின்
எச்சில்களில் நமக்கான
கரைகளைக் கழுவிய
அந்த தினங்கள் மறைந்து
கானல் நீராய் விரிகிறது.
இடையில் முளைத்த
உன் மீதான வெறுப்புகளை
அள்ளிப் போட்டுக் கொண்டு
கண்களை அகல விரித்து
கானல் நீர் நோக்கி
என் வாகனத்தை
விரைக்கிறேன்.
பொட்டல் காடுகளுகளின்
தலைக்கு நேர் வகுடு
எடுத்ததாய் நீளும் சாலையின்
தொலைவில் பல்லிளித்து
அழைக்கும் கானல் நீர்களை
மோதிக் கொன்று விட்டு
நகர்கிறது என் வாகனம்
என் பிணத்தை
ஏற்றிக் கொண்டு.
- சோமா (
கீற்றில் தேட...
கானல் நீர் தினங்கள்
- விவரங்கள்
- சோமா
- பிரிவு: கவிதைகள்