கீற்றில் தேட...

கல்யாண வீடுகளில்

யாரும் யாருடனும்

பேசிக் கொண்டிருக்க

நேரமிருப்பதில்லை.

அறுந்து அறுந்து

தொங்கும் உரையாடல்களில்

நிறைவில்லை.

இழவு வீடுகள்

அனைவருக்கும்

சுகமானவை.

யாரிடமும் பேச முடியாமல்

கிடத்தப்பட்டிருப்பவனைத் தவிர.