கீற்றில் தேட...

மாற்றான் தோட்டத்து வண்டுகள்
மலரொன்றைச் சுற்றி மொய்த்தன
புலப்படாத வண்டுகளின்
மொழி பேதம் திரையொன்றை
விரித்து மன ஊமையாய்
மலருக்கு வெளுத்திருந்தது
மலருக்குப் புரியாது
ரீங்காரிக்கும் பெயர்களை
மாற்றிக் கொள்ள வண்டுகள்
ஒன்று கூடி எண் வரிசையில்
புதுப் பெயர்களிட்டுக் கொண்டன‌
புலம் பெயர்ந்த பெயர்களை
மலர் புறக்கணித்ததில்
தங்களுக்கான அடையாளங்க‌ளை
நாலாபுறமும் அலைந்து
தோய்ந்தன வண்டுகள்
கொம்பு வ‌ரிசை கோடு வ‌ரிசை
புள்ளி வ‌ரிசை வ‌ட்ட‌ வ‌ரிசை
ந‌ட்ச‌த்திர‌ வ‌ரிசை மூக்குக்கொம்பு
வ‌ரிசையென அவைக‌ளுக்கான‌ப்
பெய‌ர்களை இற‌க்கைக‌ளில்
எழுத‌த் தொட‌ங்கினான் காம‌ன்.

-சோமா