பாவ மூட்டைகள்
சிலுவையுறு கொண்டு
தேவன் தோளேற்றப்பட்டது
அவன் சிந்திய இரத்தத்தில்
குளித்து வெண்மை
தறித்தன பாவங்கள்.
விலா எழும்பு முறித்து
சிலுவை இழுத்து வரப்பட்டது
ஆணி கொண்டு அறைகையில்
பாவங்களைச் சுமந்து
குறுகி நின்றான் தேவன்
எங்கும் நிமிர்ந்து நிற்கின்றன
சிலுவைகள்
- சோமா (