கீற்றில் தேட...


மழைக்குக் குடை பிடித்தால்
குடைக்கு மழை பிடித்துவிடுகிறது...
விரிந்த குடை மடங்க மறுக்கையில்...

காத‌ல‌ர்க‌ள் குடை பிடித்துக்கொண்டாலும்
காத‌ல்க‌ள் ம‌ட்டும் எப்போதும் ந‌னைந்த‌ப‌டியே...

நடக்கச்சொல்லி காலைப் பிடித்தாலும்
இடுப்பில் தூக்கிப்போகச் சொல்லி
வாசலில் நின்றழும்
இளைய‌ பிள்ளை குடை...

ம‌ல‌ட்டு வானம் மேக‌மாய் பூக்கையில்
பூப்புநீராட்டுவிழா ம‌ழை...

மண்வாசத்தின் நெடு நாள் உறக்கத்தை
நீரூற்றிக் கலைக்கிறது மேகம்
மின்னல் கண்சிமிட்டலுடனும்,
கேலியிடிச்சிரிப்புடனும்...

- ராம்ப்ரசாத், சென்னை (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)