கோடி முறை முயன்ற போதும்- எந்தன்
காதல் குறையுதில்லை போடீ
தேடித் தவித்ததுவா கொஞ்சம்-இந்தப்
பிறவி முழுவதுமா தேட?(கோடி)
காட்சி கனவிலொரு பாதி-அது
காண்கிறவர் அறிவ தில்லை
ஆட்சி அழகுவிழி செய்யும் உன்னைக்
காண வழியுதடி இன்பம் (கோடி)
யாரு முனக்கு இல்லை ஈடு...எனில்
யாவர்க்கும் நீயே அழகன்றோ...
வாரியணைக்கு மழை போலே-என்னை
தேடி நனைத்தவளும் நீயே....(கோடி)
பாதை வெறுத்தவிழி பாவம்-என்னை
நீயும் விலகிச் செல்லுவாயோ-
கோணல் நதியலையாய் நானும்
உந்தன் வாழ்வைத் தொடர்ந்து வருவேனே....(கோடி)
கீற்றில் தேட...
கோடி முறை முயன்ற போதும்....
- விவரங்கள்
- ஆத்மார்த்தி
- பிரிவு: கவிதைகள்