கீற்றில் தேட...

மரணத்துக்கான படுதாவை
பலங்கொண்டு
கீழே இறக்கிவிட…

காத்திருக்கிறார்கள்.
மேடையைக் கடந்து
சில பார்வையாளர்கள்..

கதாபாத்திரங்கள்.
அயர்ந்து தூங்குகின்றன
ஒப்பனை அறைகளில்

பின்புலம் அறியா
எவனோ ஒருவன்
தெருவோரங்களில் நின்றபடி..

தொடர்ந்து
விநியோகம் செய்து கொண்டே இருக்கிறான்...
நாடகத்துக்குரிய அறிவிப்பை
சின்னக் காகிதங்களில்..

******
- இளங்கோ