குளியலறையில்

ஒட்டிவைத்த

ஒட்டுப்பொட்டு

உனக்குப் பிடித்த

நீலநிற சட்டை

பிறந்தநாளன்று

பரிசளித்த புத்தகம்

அடிக்கடி உபயோகிக்கும்

வெளிர்மஞ்சள் புடவை

இப்படி.. இப்படி..

உன்னை ஞாபகமூட்டும்

எல்லாவற்றையும்

அப்புறப்படுத்திவிட்டேன்.

உன் ஞாபகக்கூடையை

தூக்கிக்கொண்டலையும்

மனதை என்ன செய்ய...?

- கி.சார்லஸ்

 

Pin It