கருத்த முலையிலிருந்து
பொழியும்
வெள்ளை தாய்ப்பாலாக
பொழிகிறது மழை..!
கறுப்புக் குடைப் பிடித்து
வானம் முழுக்க
வலம் வருகிறது மேகம்..!
பூமியை முத்தமிடும்
ஒவ்வொரு மழைத்துளியும்
உறங்கிக் கிடக்கும் உயிரை
உசுப்பி விடுகின்றன..!
பூக்களுக்கு
தேனை ஊட்டி விடும்
மழைத்துளிகள்
வானவில்லுக்கு
வண்ணங்களை பரிசளிக்கின்றன..!
காதலைப் போலவே
கரைந்து விடும் மேகத்திற்கு
வானவில் வந்து
வண்ணங்களின் அணிவகுப்பால்
வணக்கம் சொல்கிறது..!
ஒரு மழையைப் போல
பிறர்காக வாழாத மனிதன்
ஒரு இரவு நேரத்தின்
ஈசலைப் போல வாழ்ந்து
இறந்து போகிறான்..!
- அமீர் அப்பாஸ் (