கீற்றில் தேட...

 

மை நிரப்பிய பேனா
ஒழுங்கு படுத்தப்பட்ட காகிதங்கள்
தம்ளரில் தண்ணீர்

மேலும் நீண்ட‌
அவனது தேவைகளெல்லாம்
மேஜை மேல் வைக்கப்பட்டன‌

வியர்வை சிந்தும்
உழைப்பாளிகள் பற்றி
உட்கார்ந்த இடத்தில்
எழுதத் தொடங்கினான்

அதற்கும் முன்பாக‌
"ஏ.ஸி. "-யை மிதமாக்கினான்.

- அருண் பழனியாண்டி (poetarunachalam@gmail.com)