கடல்...
இது நிலத்தின் பாகுபாடா?
அல்லது குறியீடா?
ஆவணப்படுத்திடாத வரலாறுகளின்மேல்
மிதக்கிறது கடல்...
நனைந்ததும் காய்ந்துவிடுகிறது கரை...
காய்ந்ததும் நனைத்துவிடுகிறது கடல்...
தலையால் என் பாதம் தொட்டு
வாலால் அத்துவானத்தை இடிக்கிறது
திமிர் கொண்ட கடல்...
காதலில்
ஊடல்களை விழுங்குவது கரை,
காதல்களை விழுங்குவது கடல்.
நான் கடல் காதலன்.
இதை எழுதுகையில்
கடல் பைத்தியம்.
காலம் கடலை உறுதி செய்கிறது...
கடல் பூமியை உறுதி செய்கிறது...
நீரில் எட்டிப்பார் நீ தெரிவாய்...
கடலில் எட்டிப்பார் கடல்தான் தெரியும்...
கடல் ஒரு விந்தை...
விந்தை கடலில் சந்தை...
கடல் உலகின் நவீனம்...
உலகம் கடலின் நவீனம்...
கடல் ஒரு கோணத்தில் இறை...
உன்னிலும் உண்டு...
என்னிலும் உண்டு...
நீரின்றி தோல் இல்லை...
தோல் இன்றி விலங்கு இல்லை...
- ராம்ப்ரசாத், சென்னை (
கீற்றில் தேட...
தண்ணீர்க் காட்டில் - 1
- விவரங்கள்
- ராம்ப்ரசாத்
- பிரிவு: கவிதைகள்