கீற்றில் தேட...

ஏற்கனவே சொல்லப்பட்டிருக்கிறது.
இடதுபுறம் எப்பொழுதும் பாதுகாப்பானது என்று.
சொல்லப்பட்டிருப்பதைத் தவிர
இடது புறத்தைப் பற்றி எந்த
பிரியமும் இல்லை.
வலது புறம் குறித்த எந்த ஒதுக்குதலும்
இல்லைதான்.
என்றாலும் கூட
இடது புற நகர்தல் அடிக்கடி நிகழ்கிறது.
வலது புறத்தை பார்க்க மட்டும் முடிகிறது.
ஒரு இடது புறச்சாலை,
மீட்டுக்கொள்கிறது
வீடு திரும்புதலின் பொழுது
அன்றைய காலையின் வலதுபுறத்தை.
வாழாமையும் மீறலும்
கடந்து கொண்டே இருக்கின்றன.
எதிரே கடக்கும் வலதுபுறங்களில்

சொந்தச் சாலையொன்றைக்
கனவுமுழுக்க மெழுகி
விரைவாகக் கிளம்பினேன்.
முன் தீர்மானித்த
வலதுபுறச்சாலையில்.
வரிசையாக எதிரில் வந்த
குருவிகளை வீழ்த்திச்சரித்தபடி.