மின் விளக்கு
இத்தனை காலம்
வாயோயாமல் பேசிவிட்டு
திடுமென திக்கத்துவங்கியது
அந்த மின் விளக்கு...
அதன் பலவீனப்பட்ட
இருமல் சப்தங்கள்
அதன் ஆயுளை
குறிப்பெடுத்திருந்தன...
ஏற்கனவே காலாவதியாகிப்போன
மாத்திரைகளால் அதன் ஆயுளை
நீட்டிக்க இயலவில்லை...
அதன் கடைசி மூச்சுக்கு
காத்திருக்கும்வரையிலான காலம்
அதைப் புதைப்பதற்கான
இடத்தை தேர்வு செய்ய
உதவலாம்...
- ராம்ப்ரசாத், சென்னை(