குதி காலயுர்த்தி அதன் விளிம்பில் அமர்ந்தவாறு
கன ரக சாவியொன்றை தரை மண்ணில் கிளறியபடி
களபரிசோதனையாளன்
டாஸ் வென்ற குழு முதலில்
பந்து வீச்சை தேர்ந்து எடுக்கலாம்
ஆட்டத்தின் தொடக்கதிலேயே
விக்கெ ட்டுகளைச் சாய்க்கலாமென்றும்
பந்து காற்றில் திசை மாறி சுழலுமென்றும்
மட்டையாளர்கள் நன்கு ஆடும் பட்சத்தில்
இக் கணிப்புகள் மாறலாம் என்றும்
தொலைக் காட்சிக்கு பேட்டி தருகிறான்
சிறியவிளம்பர இடைவேளைக்குப் பிறகு
நடக்க இருந்த ஆட்டத்தைக் காண
ஆவலோடிருந்த தருணத்தில் ஏற்கனவே
தொடங்கியிருந்தது ஆடு களத்தில்
மழையும், காற்றும் தனது ஆட்டத்தை
- ரவி உதயன் (