பள்ளிக் கூடங்களிலிருந்து
குடிசைகளை இலக்காகக் கொண்டு
பயணிக்கின்ற சிறுவர்கள்
காற்றில் சிதறும்
ஓசைகளை
செதுக்கி
திரும்பத் தரும்
அந்த மலைப்பாதம் நெடுக ....
அச்செதுக்கல்கள் ஓயாதபடிக்கு
சப்தங்களை
மலைநோக்கி
அவர்கள் வீசுகிறார்கள்
திரும்பக் கிடைத்த
பரிணாமத்தை
குவிந்த காதுகளில்
பெற்றுக்கொண்டபின் ..
அதன் இன்னொரு
படிமத்தை
வீசுதல் பழகி
இடம் நகர்ந்தவாறு
தொடர்ந்து
உருமாற்றம் கொள்ளும்
ஓசைகள்..
கூட்டத்தில் இருந்து
ஒவ்வொன்றாய் விடை பெற்று
அடுத்த மாலைக்கான
ஓசைகளை
மௌனத்தில்
எதிரொலிக்கச் செய்தவாறு....!
குடிசைகளில்
புகுந்துவிடுகின்றன ..
செதுக்கல்களின்
எல்லை சாரா முடிவென..!!
- கலாசுரன் (