என் சரீரம் வறண்டு சுருங்குவதை
தலை மயிர்கள் நரைத்து வருவதை
காண் உலகு மீதான பார்வை
கூர் மழுங்குவதை
வாசிப்பின் விசாலம் குறுகுவதை
காகிதத்தில் பதிவாகும் எழுத்துகள்
அதன் உருவம் இழந்து கிடைப்பதை
அநேக நேரங்களும்
தனிமையோடு கரைவதை
நிகழ்வுகள் நிதானமிழப்பதை,
ஒருபோதும் பொருட்படுத்தாமல்
ஒவ்வொரு பொழுதாய்
கடந்து போகிறேன்
எனது பால்யத்தை
நினைத்துக்கொண்டு
-இரஞ்சித் பிரேத்தன் (