இயற்கையின் படைப்புகள் எல்லாம்
வட்டவடிவங்களாகவோ
அதைச் சார்ந்ததாகவோதான்
இருக்கிறது
பயன் கருதியோ
பணியின் நிமித்தமாகவோ
வட்டங்களை தட்டி நிமிர்த்தி
தனக்கான வடிவங்களை படைத்தவன்
மனிதன்தான்
முதலில் மிருகங்களிடம் இருந்து
தங்களை, தங்கள் வம்சங்களை பாதுகாக்க
வட்டமான கூழாங்கற்களை
முக்கோண வடிவத்தில்
மாற்றியதிலிருந்து
நவீன காலத்தில் காய் கனிகளை
சதுரங்களாக மாற்றியது வரை
மனிதனின் பணி தொடர்ந்துகொண்டேதான்
இருக்கிறது இது நாள் வரை
வடிவங்கள் எத்தனை இருந்தாலும்
நம்மை அதிகம் கவர்வதென்னவோ
வட்டமான முகங்கள்தான்.
அவைகளில் எல்லாம்
அம்மாவின் சாயலிருக்கும்
அதுதான் காரணம்
- பிரேம பிரபா (