என்னை விட்டு வெளியேறிடும்
நிலவை
தொலைத்தூர இருளில்
கண்சிமிட்டி அழைத்துக் கொண்டது
ஒரு
நட்சத்திரம்.
பார்த்தவுடன்
பற்றி எரியும் நெருப்புக் குழம்பில்
விழுந்து.. குளிர்ந்து..
இன்னுமொரு கோளாகி
எனக்குள் நுழைந்துவிட
காத்துக் கிடக்கிறது
பல யுகங்களாய்
கிடக்கட்டும்..!
- இளங்கோ (