கீற்றில் தேட...

நடந்து செல்கிறார்கள்
சிறுவனின் கை
அன்பின் வழிநடத்துதலுக்காக
அப்பனின் கையை
பற்றிக்கொள்கிறது...

யார் மேலோ எதன்மேலோ கொண்ட
கோபம் அப்பொழுதே
அக்கைகளை உதறிவிட

கலந்குவதென்னவோ
அச்சிறுவனின் கண்கள் தான்.

உதறப்படுகையில்
கனலுக்கு ஒப்பான
சோகப் படிமங்கள் அவன் மனதில் விழுந்து
புகைவதுண்டு...

பயணங்கள் முடியும் வரை
முடியாமல் தொடர்கிறது
அன்பிற்கான அணுகுதலும்
கோபத்திலான உதறப்படுதலும் ...

அங்கு குளிர்விக்கும் விதமாக
அவனை அணைத்துக்கொண்டது
அன்னையின் கரங்கள்..

நிகழ்ந்தவை அனைத்தும்
மறந்து சிரிக்கிறான் சிறுவன்
அன்பின் அரவணைப்பில்...

- கலாசுரன் (royalstaroflion@gmail.com)