
சோர்வும் சலிப்பும்
புகைச்சலும் புழுக்கமும்
துளைக்கிறது ஓர் எலியைப் போல்
பொறுப்புணர்வும் பகுப்புணர்வும்
பூட்டப்படுகிறது எதிர்கால விலங்கால்
நமக்கு.
நம் இருப்பும் செயலும் 'ஒரு மாதிரி'
அச்சில் வார்க்கப்பட்டு உருளும்
நினைவுகளாலும் சிந்தனைகளாலும்
பிதுங்குகிறோம் நமக்கு வெளியே
ஊட்டப்படுகின்ற
கற்பனைகளும் காட்சிகளும்
உணர்வுகளும் உணர்ச்சிகளும்
நம்முள் கூடும்.
காலமற்ற ஓர் அலகில்
உருக்கொள்கிறது பேரச்சம்
என்னுள்
அது வளர
நெட்டித் தள்ளுகிறது மூர்க்கத்துடன்
ஓர் போலீஸ்காரனைப்போல் என்னை
மறைவிடத்திற்கு...
- தங்கம் (