இப்போதுதான் கத்திரி வெயில் முடியப் போகுது.. ஆனால்வெயிலின் உக்கிரம் கொஞ்சம் கூட இன்னும் குறைந்தபாடில்லை என்பது ரொம்பவும் கசப்பான உண்மைதான்.இந்த ஆண்டு கோடை மழையும் அவ்வளவு இல்லை. இதெல்லாம் எதனால் என்று தெரியுமா? பெரியவர்கள் சொல்வதுபோல் காலத்தின் கோலம்தான் என்று சொல்லலாமா?அதுவும் கூட ஒரு வகையில் உண்மைதான் நண்பா! எப்படி.. அதான், புவிவெப்பமடைந்ததால் அதனால் ஏற்பட்ட மாற்றமும், அதன் பின்னணியில் உருவான சீதோஷ்ணநிலை மாற்றமும்தான்.. .இதெல்லாம் இனி மாற்றவே முடியாதா என்று நீங்கள் மனதிற்குள், முணுமுணுப்பது, எனக்கும் கேட்கிறதே..! இதற்கு வழி உண்டு அப்பனே.. ஆனால், அனைவரும் சேர்ந்து கைகொடுக்க வேண்டும். ஊர் கூடி தேர் இழுத்தால்தான் இந்நிலையை மாற்ற முடியும்.. அமெரிக்க அண்ணாச்சியும் மற்ற வளர்ந்த நாடுகளும், அவரவர் தத்தம் சொந்த சுயநல லாபங்களையே கருத்தில் கொண்டு செயல்படுகின்றனரே..! எப்படி நம்மைப்போன்ற ஏழை நாடுகளெல்லாம் வாழ..?

கார்பன் உள்வாங்கும் இடங்களான காடுகளை மீண்டும் உருவாக்குவதே கரியமில வாயுவை குறைக்கும் ஒரே வழியாகும் என விஞ்ஞானிகள் ஆழமாக கருத்து, தெரிவிக்கின்றனர். ஆனால் சூழலியலாளர்கள் என்னதான் கரடியாக கத்தினாலும், மக்கள் என்ன சொன்னாலும் சரி.. , பொருளாதாரத்தை, பணம் பண்ணுவதை குறிக்கோளாகக் கொண்ட முதலாளிகளுக்கு இதனை சொல்லுவது யார்.? இதற்கான திட்டங்களை, சட்டங்களை கொண்டு வருவது யார்? யார் கட்டுப்படுத்துவது? மக்கள் செய்ய முடியுமா? சூழலியலை, பாதுகாக்க வேண்டிய அரசுக்கு அது பற்றி இம்மியும் கவலை இல்லை.அவர்களுக்கு வேண்டியது முதலாளிகளின் பணமும், தேர்தலின் போது, அவர்களின் ஆதரவும் தான். பிறகு எப்படி பெருமுதலாளிகளை கட்டுப்படுத்த முடியும்.. அவர்களின் கைக்குள்ளும், மடிக்குள்ளும் அல்லவா கிடக்கின்றனர். எனவே சூழல் பாதுகாப்பும், புவி வெப்ப மடைதலும் அதன் தொடர்பான சீதோஷ்ண நிலை மாற்றமும் குறித்து மாற்றம் செய்ய வேண்டியது, பெருமுதலாளிகளும், , அவர்களைப் பாதுகாத்துக் கொண்டிருக்கின்ற அரசும்தான். மக்கள் வெறும் பார்வையாளர்களாக மட்டுமே இருக்க வேண்டிய கொடுமையான நிலைதான் நிலவுகிறது..!

மனித செயல்பாடுகளால் வெளியிடப்படும் கரியமில வாயுவை, தாவரங்கள் உள்வாங்கி, அதனை, நாம் எடுத்துக்கொள்ளும் கார்பனாக மாற்றி, சேமித்துவைக்கின்றன. “இங்கே கார்பனின் ஆழ்கிணறுகளாக, உள்வாங்கிகளாக இருப்பவை, தாவரங்களும், அடர்ந்தகாடுகளும்தான். கரியுமில வாயுவை, உள்வாங்கும்இடங்களான காடுகளைமீண்டும்உருவாக்குவதே கரியமில வாயுவை குறைக்கும் ஒரே வழியாகும் என விஞ்ஞானிகள் ஆழமாக கருத்து, தெரிவிக்கின்றனர்.

அதே சமயத்தில், கரியமில வாயுவை உள்வாங்குவதில் கடல்களும் கூட பங்கு வகிக்கின்றன. அதனால் தான், என்ன வெயில் எரித்தாலும் நாம் கடல் ஓரத்தில் இருந்தால், மாலை நேரத்தில் தென்றல் காற்றை அனுபவிக்கிறோம். இதன் காரணம், கடல்தான்பூமியின் வெப்பத்தை உள்வாங்கி, புவியை குளிர்ச்சியுரச் செய்கிறது என விஞ்ஞானிகள் கருத்து தெரிவிக்கின்றனர். இல்லையெனில் இந்த கரியமில வாயு, வலிமண்டலத்திலேயே தங்கி வலம் வருமாம், அப்போது என்ன என்ன நிகழும் என கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.! இருந்தாலும் கூட, அளவுக்கு அதிகமாக கரியமில வாயு பூமியிலிருந்து வெளிஏற்றப்படும்போது அது கடலின் குணத்தை மாற்றி அமிலத்தன்மையை உண்டாக்கு கின்றது என்றும் சொல்கின்றார்.கடலின் வேதிப்பண்பையே மாற்றி விடுமாம்.எப்படி இருக்கிறது கதை பார்த்தீர்களா, நண்பர்களே. பிரிட்டனில் சொல்லும் தகவல் படி, கடந்த 450, 000 ஆண்டுகளில், இப்போது நிலவும் கரியமில வாயுவின் அளவுதான் அதிகமாம்..

புவி வெப்பமடைதலும், சீதோஷ்ணநிலை மாற்றமும், இந்த புவிக்கோளத்தை ஏராளமான தாக்கத்திற்கு உள்ளாக்கி இருக்கின்றன. மனிதனுடைய வாழ்நிலையும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. வெறும்2 மாற்றம் கூட உலகின், வேளாண்மை, பல்லுயிரியம், கடல் நீர்போன்ற வற்றில் பாதிப்பை உண்டாக்கி இருக்கின்றன. 2009ஆம் ஆண்டின் முடிவில், சீதோஷ்ணநிலை அதிக பாதிப்புக்கு உள்ளானதை அறிஞர்கள் தெளிவாக சுட்டிக்காட்டி உள்ளனர் 2009 அக்டோபர் 22ஆம் நாள், ஐரோப்பிய தேச தட்பவெப்ப சேவை மையம், ஒரு தகவலைத் தந்தது. தொழிற்புரட்சி நடந்த பிறகு, 4டிகிரி வெப்பம் கூடினாலே. எதிர்பாராத அளவுக்கு, பிரச்சனைகள் உருவாகும், என்றும், அதனை சந்திப்பது கடினம் என்றும் சொல்லி உள்ளனர். நம்மால் அதனைத் தாங்க முடியாது என்றும், மேலுமொருபுதிய வரைபடம் வேறு தயாரித்து தந்துள்ளனர்.

இந்த 4 டிகிரி வெப்பம், உலகம் முழுவதும் ஒரே சீராக பரவாது. நிலம் கடலை விட விரைவில் சூடாகி விடும். முக்கியமாக அதிக அட்ச ரேகை உள்ள இடங்களில், அதுவும் ஆர்டிக் போன்ற பகுதிகளில், வெப்பம் அதிகமாக உயர்ந்துவிடும், சராசரி நிலத்தின் வெப்ப நிலை, 5.5. டிகிரி என்பது தொழிற்புரட்சிக்குமுன் இருந்ததைவிட 5.5. டிகிரி கூட இருக்கும். மனித இனத்தின் மேல் சீதோஷ்ணநிலை ஒரு தாக்குதல் நடத்தி இருக்கும். .விவசாய நிலங்கள் சரிவர விளையாது. அதிகம் தானியப் பயிர் விளையும் பகுதிகளில், ஏராளமான சரிவை சந்திக்கும். இமயமலையில் பாதி பனிப்பகுதி, 2050க்குள் கரைந்து, வெள்ளி பனிமலை மீது உலாவுவோம் என்று பாரதி பாடிய இமயம், மொட்டை இமயத்தில் ஏறி விளையாடுவோம் என்று புதிய பாரதிப் பாட்டு பாட வேண்டியது தான். சீனாவின் 23 %மக்கள், பனி உருகியதாலும் உலர் வெப்ப நிலையாலும் அவதிப் படப் போகின்றனர் என எச்சரிக்கின்றனர்..

நிறைய விஞ்ஞானிகள், இந்த வெப்ப உயர்வால், மனித சமுதாயமும், இயற்கையும் தானாகவே முடியாத அளவு, இடர்ப்பாடுகளை, சீதோஷ்ண நிலை மாற்றங்களை சந்திக்கப் போகின்றனர் என எச்சரிக்கின்றனர். கடலிலும், நிலத்திலும் நிறைய ஹரிகேன் சுழற்சியையும், மிகுதியான வறட்சியையும், மானுடம் சந்தித்து அவதியுரப்போகின்றது. அதிக வெப்பமும், தாங்க முடியாத மழைப் பொழிவும் உண்டாகப் போகிறது. அறிஞர்கள், நம்மை உஷார்ப் படுத்தி உள்ளனர். என்ன தெரியுமா? வடஐரோப்பா எப்போதையும் விட, மிக மிக குளிரைச் சந்திக்கப் போகிறது. ஏன் தெரியுமா?துருவப் பகுதியின் பனி கரைந்து உருகி, தெற்கு நோக்கி ஓடி வரப்போகிறது.. எனவேதான், இப்படியே சீதோஷ்ணநிலை உயர்ந்து கொண்டே போனால், இதையெல்லாம் யாராலும் தடுத்து நிறுத்த முடியவே முடியாது. இதன் விளைவால், கல்ப் நீரோட்டம் நின்று போய் விடும். மெக்சிகோ வளைகுடா விலிருந்து, இங்கிலாந்துக்கு வரும் சூடான நீரோட்டத்தைநிறுத்தி விடும். காலப்போக்கில், இமயமலையும் கரைந்து போய், அங்கும் நீர் தட்டுப்பாடுஏற்படும்,

கடந்த சில ஆண்டுகளாக, இப்படி, பூமி ஏகத்துக்கு சூடாகி கொதித்துக்கொண்டு இருப்பதால், மிக மோசமான பின் விளைவுகள் ஏற்படும், என சுழல் குழுக்களும் நமக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. உலக தட்ப வெப்ப அமைப்பும், கூட இந்த கருத்தையே வலியுறுத்தி உள்ளன. உலக தட்ப வெப்ப அமைப்பு, "இது வரை, உலகில் மோசமான விளைவுகள், எப்போதாவது, ஏற்படுவது உண்டு. ஆனால் சமீப காலங்களில், இந்நிகழ்வுகள், தொடர்கதையாகி விட்டன" என்று தெரிவிக்கின்றது. உலக தட்ப வெப்ப அமைப்பின் அறிவிப்பு, எதிர்பாராததாய், நம்மையெல்லாம் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.. என இங்கிலாந்தின் செய்தி தகவல் நிறுவனம் தெரிவிக்கிறது. 2004இல் நடந்த இயற்கை பேரிடர்கள், சூறாவளிகள், ஏராளமான மனித உயிர் இழப்பு போன்றவை இதனால்தான். கடந்த 50 ஆண்டுகளில், மனித செயல்பாடுகள்தான், பூமி சூடாவதற்கு அதிகமாக பங்களித்து உள்ளன. இதுவரி 1950 களிலிருந்து, தீவிரமான வெப்பநிலை, தீவிரமான குளிர், என அடிக்கடி மாறி மாறி தட்ப வெப்ப நிலை இருந்து வந்துள்ளது. வடக்கு மற்றும் மத்திய ஆசியாவில் உலக சராசரி விகிதத்தைவிட 40% அதிகமான

அதிக வெப்ப நிலை பரவுகிறது. 20ஆம் நுற்றாண்டு இருந்ததைவிட, இப்போது, சுமார் 1020 செ. மீ கடல் மட்டம் உயர்ந்துள்ளது, 2100ஆம் ஆண்டில் கடல் மட்டம் 988 செ. மீ வரை உயரும். பனிப் பாறைகளும் பனிக்கட்டிகளும் உருகுவதால் கடல் மட்டம்உயருகிறது. பசுமை அக வாயுக்களை, கட்டுப்படுத்தி குறைத்தாலும் பூமி முன்பே சூடானதால், கடல் மட்டமும், அங்குள்ள வெப்பநிலை உயர்வு, இந்த நிகழ்வு இப்படியே இன்னும் சில நுற்றாண்டு களுக்கு நீடிக்கும்..என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றார். 1960 இல், இருந்த ஏரிகளையும், நதிகளையும், மூடி இருக்கும் பனிபடர்வு10%ம்குறைந்து விட்டது, 21 ஆம் நுற்றாண்டில்துருவ முனைகளில், பனிப்பாறைகளும் தொடர்ந்து உருகிவிடும். பனிப்படர்வும் தொடர்ந்து குறையும் நாம் விழிப்புடன் இருந்து, மக்களிடம் விழிப் புணர்வை ஏற்படுத்தி, நம் தலைமுறைக்குதர வேண்டிய பூமி ஜென்ம கடன் அல்லவோ.. இப்பூமி..!

Pin It