சமீப காலங்களால் பாஜகவினரால் நம் நாடு சந்திக்கும் பொருளாதார நெருக்கடிகளையும் விலைவாசி ஏற்றங்களையும் மடைமாற்றம் செய்வதற்காக, பல்வேறு யுத்திகளை கையாண்டு வருகிறார்கள். குறிப்பாக ஹிந்தி மொழி பற்றியும் தமிழகத்தின் நிதிநிலை அறிக்கை பற்றியும் தங்கள் இஷ்டத்திற்கு பேசிக் கொண்டு வருவதைக் காண்கிறோம்.

பாஜக ஆட்சிக்கு வரும்போது மாநிலங்களின் கடன்களும் இன்றைய நிலையில் மாநிலங்களின் கடன்களையும் நாம் ஒப்பிட்டுப் பார்த்தாலே இந்த ஒன்றிய ஆட்சியின் தவறான பொருளாதாரக் கொள்கைகள் தான் என்பதை நாம் காண முடியும்..

மாநில நிதி நிலை

https://rbi.org.in/Scripts/PublicationsView.aspx?id=20869 இந்திய மத்திய வங்கியின் அறிக்கையின் அடிப்படையில் 2005 முதல் அனைத்து மாநிலங்களின் வருடாந்திர கடன் விபரத்தை பாருங்கள். 2013 வரை காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்த காலத்தில் மாநிலங்கள் பெற்றிருந்த கடன் தொகை 22.10 லட்சம் கோடிகள். 2022 லே பாஜக மத்தியில் ஆட்சியில் இருக்கும் காலங்களில் மாநிலங்களின் கடன் தொகை 69.47 லட்சம் கோடிகள்.

state loanமத்தியில் இருக்கும் மோடியின் மோசமான பொருளாதாரக் கொள்கை. ஏறக்குறைய மூன்று மடங்குக்கும் மேலாக மாநிலங்களை கடனாளியாகத் தள்ளிவிட்டது

இந்தியாவில் இருக்கும் மொத்த மாநிலங்களின் எண்ணிக்கை 31. ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு விதமான வருவாயைக் கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு மாநிலமும் வெவ்வேறு விதமான கடனைக் கொண்டு உள்ளது. இங்கே கடன், செலவினங்கள் ஆகியவை ரூபாய் மதிப்பில் ஒப்பீடு கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதை விழுக்காடு ரீதியாக ஒப்பிட்டால் என்ன வருகிறது என்பதையும் நாம் பார்த்தாக வேண்டும்.

ஒன்றிய அரசின் 15வது நிதி ஆணையம் பரிந்துரைத்த படி ஒவ்வொரு மாநிலமும் அதன் GDSP யின் அடிப்படையில் இருக்கவேண்டும் என்று பரிந்துரைத்து இருக்கிறது. அதில் தமிழகத்தில் இருக்கும் கடனானது பரிந்துரைக்கப்பட்ட அளவுக்குள் உள்ளதாகவே குறிப்பிட்டு இருக்கிறது என்பதை இந்த குழு ஒப்புக் கொண்டு இருக்கிறது.

https://prsindia.org/budgets/states/tamil-nadu-budget-analysis-2022-23

ஒன்றிய அரசின் கடன்கள்

மோடி ஆட்சிக்கு 2014 லே ஆட்சிக்கு வரும்போது இந்திய அரசின் ஒட்டுமொத்த கடன் 53.12 லட்சம் கோடிகள். https://dea.gov.in/sites/default/files/data_march_2014Q1.pdf

டிசம்பர் 2021 நிலையில் இருக்கும் கடன் 128.50 லட்சம் கோடிகள்

https://dea.gov.in/sites/default/files/Data%20on%20Central%20Government%20Debt%20for%20the%20quarter%20ended%20December%202021%28Q4%29.pdf

மார்ச் 22 வரை வாங்கிய கடன்கள் 159.20 லட்சம் கோடிகள் என்று தணிக்கை செய்யப்படாத கணக்குகள் வருகிறது

அதாவது இந்தியாவின் கடன்கள் மூன்று மடங்குக்கு கொண்டு சென்று இருக்கிறார் திருவாளர் மோடி அவர்கள். இதைப் பற்றி எல்லாம் பாஜகவினர் எங்கும் வாய் திறக்க மாட்டார்கள்.

இவர்கள் ஆட்சிக்கு வந்த உடன் இவர்கள் மிச்சப்படுத்தியதாக சொன்ன தரவுகள் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். இவர்கள் மிச்சப்படுத்தியதை விட ஊதாரித்தனமாக இந்த நாட்டை நாசமாக்கி இருக்கிறார்கள் என்பது புலப்படும்.

எல்லாரும் வங்கியில் கணக்கு துவங்குங்கள்.. இதன் மூலம் மட்டுமே கேஸ் மானியம் விநியோகிக்கப்படும். இந்த திட்டத்தால் அரசுக்கு வருடத்திற்கு 2 லட்சம் கோடி மிச்சமானது என்று அறிவித்தார்கள். கடைசியில் அந்த மானியம் கொடுப்பதை நிறுத்திவிட்டு, *இன்று வரை இந்த அரசாங்கம் மக்களிடம் வரியாகப் புடுங்கிய பணம் மட்டும் 29.௦௦ லட்சம் கோடிகள். இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு குடும்பத்தாரிடமும் ஒரு லட்சம் ரூபாய் வரை இந்த பெட்ரோல் மூலம் மட்டும் ஈட்டினார்கள். எங்கே போனது?*

ஆதார் கார்டு ரேஷன் கார்டு இணைக்க வேண்டும்.. இணைப்பதால் ஊழல் ஒழிக்கப்படும். அதன் மூலம் வருடம் 5 லட்சம் கோடி மிச்சம் என்றார்கள். ஏழாண்டுகளில் 35 இலட்சம் கோடி வரை வரவு வந்திருக்க வேண்டும். எங்கே அந்த பணம்?

மக்களின் உழைப்பால் சேர்த்த பொதுத்துறைகளை விற்றுக் கொண்டு இருக்கிறார்கள். அந்த பணம் எல்லாம் எங்கே போனது?

காங்கிரஸ் சேர்த்து வைத்த, ரிசர்வ் வங்கியில் இருந்த இருப்பு 3 லட்சம் கோடிகளையும் தடவி வழித்து நக்கி விட்டார்கள். அந்த பணம் எங்கே போனது?

அதானிகும் அம்பானிக்கும் மட்டும் இதுவரை 12 லட்சம் கோடி ருபாய் கடன் தள்ளுபடி செய்து இருக்கிறார்கள்.

இப்படி இந்த அரசாங்கம் எந்த வழியிலும் வகையிலும் கணக்கு சொல்ல முடியாத அளவுக்கு பொருளாதாரத்தில் குருட்டுத்தனமாக நடந்து கொண்டு இருக்கிறது, நாடு மிக ஆபத்தான ஒரு பொருளாதார நிலையில் சென்று கொண்டு இருக்கிறது என்பதை நாம் தெள்ளத்தெளிவாக உணர முடிகிறது.

இவற்றை எல்லாம் மறைப்பதற்கு அவசியமற்ற நிலையை உருவாக்கிக்கொண்டு இருக்கிறார்கள்.

- ஆர்.எம்.பாபு

Pin It