"எனது மரணத்திற்கு சுதர்சன் பத்மநாபன்தான் காரணம் " - ஃபாத்திமா

"எனது பிறப்பு எனது பயங்கரமான விபத்து." - ரோஹித் வெமுலா.

sudharshan padmanapan iit staffஇப்படி எத்தனை தற்கொலைக் குறிப்புகளை வாசித்துக் கொண்டிருக்கப் போகிறோம்?

"என் பெயர்தான் இங்கு பிரச்சனை" என்று மன உளைச்சலுக்கு ஆளான ஃபாத்திமா லத்தீபின் வேதனை இந்தியாவின் தேசிய அவமானம்.

பெயர் மட்டுமல்ல தொப்பிகளும் தாடிகளும் பிரச்சனைதான். ஐஐடி-க்களில் மட்டுமல்ல ஐடி-க்களிலும் இதே பிரச்சனைதான். எனக்கும் நேரிடையான அனுபவமுண்டு.

வெள்ளிக்கிழமை தொழுகைக்குச் சென்றாலே இவர்கள் ஆள் சேர்க்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டை சுமத்தினார்கள். இது இப்பொழுதும் நடைபெறுகிறது.

இடித்துப் பார்த்தார்கள், அடித்துப் பார்த்தார்கள். எதுவுமே முடியாமல் இப்பொழுது அவர்களுடைய பலமே கல்விதான் என்று உணர்ந்து, ஆரம்பித்து விட்டார்கள் அவர்களின் வேலையை...

'காடு இருந்தா எடுத்துக்குடுவானுங்க.... ரூவா இருந்தா புடுங்கிக்குடுவானுங்க.. ஆனா படிப்ப மட்டும் நம்ம கிட்ட இருந்து எடுத்துக்கவே முடியாது'ன்னு சொன்னோம்.. இப்ப அதையும் புடுங்கிட்டானுங்க.

இது வெறும் தற்கொலையல்ல.... சகோதரிகளாக, மகள்களாக இருக்கும் ஒவ்வொரு பாத்திமாவுக்கும், அவர்களுடைய சகோதரர்கள், பெற்றோர்களுக்கும் ஒரு பகிரங்க மிரட்டல்.

வடநாட்டில் காட்டுமிராண்டிகள் வாழ்கிறார்கள் என்றுதான் தமிழ்நாட்டை நம்பி அனுப்பியிருக்கின்றார்கள்.

தமிழ்நாட்டிலும் அந்தக் காட்டுமிராண்டிகள் அதுவும் இதுபோன்ற அப்புராணி முகத்தோற்றத்துடன் இருக்கும் காட்டுமிராண்டுகளைப் பற்றி அந்த அம்மாவுக்குத் தெரியாது.

மாட்டுக்கறி சாப்பிட்டால் மிருக குணம் வருவதாகச் சொன்னவர்களின் சைவ உணவில் இவ்வளவு விஷம், பயங்கரம், கொடூரம், மிருகத்தனம் இருக்கிறதா என்ன? ஒருவேளை மாட்டு மூத்திரத்தின் பக்க விளைவுகளாக இருக்கலாம்.

இஸ்லாமிய சமூகத்தில் இருந்து பெண் பிள்ளைகளை படிக்க வைப்பதே பெரிய விசயம். அதையும் இதுபோன்ற பன்னாடைகள் வந்து பாழ்படுத்தி விடுகின்றார்கள்.

இப்போதுள்ள பிள்ளைகள் எல்லாம் தந்தை திட்டினாலே மனமொடிந்து விடுகின்றார்கள். எனது மகள், நான் கொஞ்சம் சத்தத்தை அதிகப்படுத்தினாலே தலையணைக்குள் முகம் புதைத்து அழுக ஆரம்பித்து விடுவாள்.

இப்படி வளர்ந்த பிள்ளைகள் வெளி இடத்தில் இதுபோன்ற பன்னாடைகள், மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் இழிவுபடுத்தி திட்டினால் தொந்தரவு செய்தால், தாங்குகின்ற மனநிலையில் அவர்கள் இல்லை.

ஆனால் இப்பொழுது அவர்கள் சட்டத்தின் ஓட்டைக்குள் நுழைந்து டிஜிட்டல் தற்கொலை குறிப்பு செல்லாது என்று தப்பிப்பதற்கு திட்டம் போட்டுக் கொண்டிருப்பார்கள்.

ரோஹித்தைப் போல பாத்திமாவையும் நாம் மறந்து விடுவோம்.

தனக்கே உரித்தான சரஸ்வதி மற்ற சமூகத்திற்கும் உதவி செய்கிறாளே என்கிற கோபம்தான் பாத்திமாக்களைப் பதம் பார்க்கிறது.

அவர்கள் கொல்ல வேண்டியது அவர்களுக்குள் இருக்கும் சரஸ்வதியைத்தான். ஆனால் அவர்களுக்குள் உள்ள அந்த சரஸ்வதிதான் பாத்திமாவின் கழுத்தில் தற்கொலைக்கான முடிச்சை இட்டவள்.

சுதர்சன் பத்மநாபன் போன்றோர்கள் சரஸ்வதியைக் கழுவிலேற்றிவிட்டு, இப்பொழுது சாத்தான்களை சரஸ்வதி என்று நம்ப வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

அந்தப் பன்னாடைகளின் கல்வியை ரத்து செய்ய வேண்டும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் இனி தனி நபர்களையும் தீவிரவாதிகள் என்று அழைக்கலாம் என்ற மோடி அரசின் புதிய சட்டத்தின் படி, அவர்களை தீவிரவாதிகள் என்று அறிவிக்க வேண்டும்.

ஆம் ஒரு சமூகத்தின் கல்வியையே மிரட்டலுக்குள்ளாக்குபவர்கள் தீவிரவாதிகள்தான்.

மநு சாஸ்திரம் அத்தியாயம் 8 சுலோகன் 281ன் படி 'சூத்திரன் பிராமணனுடன் ஒரு ஆசனத்தில் உட்கார்ந்தால் இடுப்பில் சூடுபோட வேண்டும்; அல்லது ஊரை விட்டுத் துரத்த வேண்டும்'

அதைத் தான் கொஞ்சம் அட்வான்ஸாக பண்ணிக் கொண்டிருக்கின்றார்கள் பன்னாடைகள்.

ரோஹித் வெமுலாக்களையும், அனிதாக்களையும், முத்துக் கிருஷ்ணன்களையும், ஃபாத்திமாக்களையும் ஒரே ஆசனத்தில் அமர வைக்க முயன்றதால் உலகத்தை விட்டே துரத்த முயற்சிக்கின்றார்கள்.

அவர்களுடய ஆசனத்தில் சரிக்குச் சமமாக கெத்தாக அமர்ந்தே தீர வேண்டும்.

பாத்திமா என்கிற பெயர்தான் அவாளுக்குப் பிரச்சனை என்றால், ஃபாத்திமாக்களுக்கான இட ஒதுக்கீடுகளை அதிகப்படுத்தப் போராட வேண்டும்.

ஃபாத்திமா பெயரில் அங்கு நூலகங்கள் ஆரம்பிக்க வேண்டும்.

- ரசிகவ் ஞானியார்

Pin It