சும்மா குரைக்காமல் வெட்டியாகத் தின்றுவிட்டு எந்நேரமும் சோம்பிக் கிடக்கும் நாய்களுக்கு அதன் எஜமானர்கள் ஒருபோதும் நிறைவாக எலும்புத் துண்டுளை வைப்பதில்லை. குறைந்த பட்சம் தன்னுடைய இருத்தலை காட்டிக் கொள்வதற்காகவாவது குரைக்கும் நாய்களுக்கே எலும்புத் துண்டுகள் கிடைக்கின்றன. அது போன்றதுதான் தமிழ்நாட்டில் உள்ள சங்கி கும்பலின் நிலைமையும். தமிழ்நாட்டில் பிஜேபி என்ற கட்சி செயல்பாட்டில் உள்ளது என்பதை மக்களுக்கு நினைவூட்ட உருப்படியான எந்த செயல்திட்டமும் இல்லாத நிலையில், சங்கிகளுக்கு ஏதாவது சர்ச்சை செய்தாவது கட்சியின் இருத்தலை நிரூபிக்க நாக்பூர் கட்டளையிட்டுள்ளது. அப்படி இல்லை என்றால், நக்பூரில் இருந்து கிடைக்கும் எலும்புத் துண்டுகள் கிடைக்காமல் போய்விடும் என்பதால், நாய்களும் தங்களுடைய அறிவுக்கு ஏற்றாற்போல சர்ச்சைகளை கிளப்பிக் கொண்டு இருக்கின்றது. பிரியாணி அண்டாவைத் திருடுவது, மோடி படத்துக்கு செருப்பு மாலை போடுவது, தன்னுடைய வீட்டிற்குத் தானே குண்டு வைத்துக் கொள்வது என அயராமல் சங்கிகள் உழைத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

s gurumurthy 550ஆனால் கட்சியின் சூத்திர அணி எவ்வளவுதான் சில்லரை வேலைகளை செய்தாலும், அதற்குக் கிடைக்கும் விளம்பரத்தையும், மரியாதையும்விட பார்ப்பன அணிக்கு கிடைக்கும் மரியாதையும், விளம்பரமுமே அதிகமாக இருக்கின்றது. அதனால்தான் கட்சியின் பார்ப்பன அணியின் வாய்ஸ் எப்போதுமே கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும். எச்.ராஜா, இல.கணேசன், கேடி.ராகவன், நாராயணன் போன்றவர்களுக்குக் கிடைக்கும் மரியாதை, அதில் கடைகோடியில் உயிரைப் பணயம் வைத்து பிரியாணி அண்டாவைத் திருடும் தொண்டனுக்கோ, ‘தாத்தா’க்களுக்கு பெண்களை சப்ளை செய்பவர்களுக்கோ கிடைப்பதில்லை. அதிகபட்சமாக அசிங்கமும், சிறையும் மட்டுமே கட்சியின் சூத்திர அணிக்குக் கிடைக்கின்றது. நாக்பூரும் பார்ப்பன சங்கிகளுக்குக் கொடுக்கும் மரியாதையில் ஒரு சதவீதம் கூட சூத்திர சங்கிகளுக்குக் கொடுப்பதில்லை. கட்சியின் அதிகாரம் மிக்க உயர் பதவிகளைப் பெற கடும் போட்டி நிலவினாலும் இறுதியில் பார்ப்பன சங்கிகளே வெல்கின்றார்கள். அப்படி பார்ப்பன சங்கி என்ற ஒரே காரணத்திற்காக பெரிய பதவியை அடைந்தவர்களில் முக்கியமான சங்கி துக்ளக் ஆடிட்டர் குருமூர்த்தி ஆவார்.

இவர் சமீபத்தில் சென்னை தனியார் மருத்துவமனை ஒன்றின் 10 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு பேசியபோது, தனது மிகப்பெரிய அறிவியல் கண்டுபிடிப்பை வெளியிட்டார். அது என்னவென்றால் “இந்தியாவில் பெண்மை உள்ள பெண்கள் 30 சதவீதம் பேர்தான். நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து உயருவதற்குக் காரணம் நம் குடும்பம். அதன் மையமாக இருப்பவர்கள் தான் பெண்கள். ஆனால் பெண்கள் முன்பு போல இப்போது இல்லை. அவர்களிடம் பெண்மை குறைந்து விட்டது. பெண்ணிற்கும், பெண்மைக்கும் வித்தியாசம் இருக்கிறது. இப்போது இந்தியாவில் பெண்மை உள்ள பெண்கள் குறைந்துவிட்டனர். பெண்மை இல்லாத பெண்கள் அதிகம் ஆகிவிட்டனர். பெண்மை உள்ள பெண்கள் தான் தெய்வம். அவர்களைத்தான் நாம் தெய்வமாக மதித்து வந்துள்ளோம். பெண்மை இல்லாத பெண்களை நாம் தெய்வமாக வணங்க மாட்டோம். அவர்களை அப்படி என்னால் ஏற்க முடியாது. விஞ்ஞானப்படி அப்படி சொல்லவும் முடியாது. பெண்கள் பெண்மையை இழந்து வருவது வருத்தம் அளிக்கிறது. நான் அனுபவப்பட்டது, இந்தியப் பெண்கள் மற்ற நாட்டுப் பெண்களுக்கு இணையற்றவர்கள். ஆனால் அவர்கள் தற்போது பெண்மையை இழந்து வருவது அதிர்ச்சி அளிக்கிறது. ஒரு பெண்மையை உருவாக்க பெண்ணால் மட்டுமே முடியாது, அவர்களின் சூழ்நிலையும் மிக முக்கியமானது” என்பதுதான்.

இது போன்ற கருத்து என்பது குருமூர்த்திக்கு முந்திய அவரது அக்கரகாரத்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருந்தாலும் இதில் குருமூர்த்தியின் ஆராய்ச்சி வேறுபடும் இடம் அதைச் சரியான புள்ளிவிவரத்துடன் கொடுக்க முயற்சி செய்ததுதான். நாம் நினைப்பது போல இந்த ஆராய்ச்சி ஒன்றும் அவ்வளவு சுலபமானது கிடையாது. ஒரு பெண் பெண்மையாக இருக்கின்றாரா என்று கண்டுபிடிக்க எந்தப் புள்ளியில் இருந்து ஆராய்ச்சியைத் தொடங்குவது, எப்படி தொடங்குவது என்று நம்மை போன்ற அறிவிலிகள் யோசிக்கும்போதே, பிறவி அறிவுஜீவியான குருமூர்த்தி போன்றவார்கள் அந்தச் செயலை மிக எளிமையாக செய்து விடுகின்றார்கள்.

அவர் இந்த ஆராய்ச்சியை முதலில் அவரது அம்மாவிடம் இருந்தோ, மனைவியிடம் இருந்தோ, மகளிடம் இருந்தோ, தான் வாழும் அக்கரகாரத்தில் இருந்தோ, இல்லை கமலாலயத்தில் இருக்கும் தன் கட்சிப் பெண்களிடம் இருந்தோதான் தொடங்கி இருக்க வேண்டும் என்பதை நம்மால் ஊகிக்க முடிகின்றது. இன்னும் ஆய்வை கறார் தன்மையில் செய்து முடிக்க, அதிகப்படியான sample கிடைக்க பிஜேபியோடு கூட்டணி வைத்திருக்கும் கட்சிகளின் பெண்களிடமும், இந்தியா முழுவதும் பிஜேபிக்கு ஓட்டு போட்ட பெண்களிடமும் ஆய்வை மேற்கொண்டிருக்கலாம். தன்னுடைய வயதான காலத்தில் முதுமையையும் பொருட்படுத்தாமல் நாட்டின் நலன் கருதி அவர் செய்த இந்த மாபெரும் அறிவியல் ஆராய்ச்சியின் முடிவு, இந்தியாவில் வெறும் 30 சதவீதம் பெண்கள் மட்டுமே பெண்மையோடு இருப்பதை உறுதி செய்திருக்கின்றது.

அதன் உள்ளார்ந்த அர்த்தம், அவரோடும் அவரைச் சார்ந்தும் இருக்கும் பெண்களில் 30 சதவீதம் பேர் மட்டுமே பெண்மையோடு இருக்கின்றார்கள் என்பதுதான். அவரது இந்தக் கண்டுபிடிப்புக்கு கட்சியினர் மத்தியிலும் பெரிய எதிர்ப்பு இல்லாத சூழ்நிலை நிலவுவதில் இருந்தே பிஜேபியில் இருக்கும் பெண்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். ஆனால் இந்தக் கண்டுபிடிப்பின் மூலம் குருமூர்த்தி என்ன சொல்ல வருகின்றார் என்பதுதான் புரியவில்லை. ஒருவேளை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு பெண்களிடம் பெண்மை உள்ளதா என சான்று கேட்கச் சொல்கின்றாரா?, வேலையில் சேர்த்துக் கொள்ளும் போது பெண்மையோடுதான் இருக்கின்றேன் என்பதற்கு சான்று கேட்கச் சொல்கின்றாரா?. ஒருவேளை பிஜேபியில் அது போன்ற நடைமுறைகள் இருக்கின்றதா எனத் தெரியவில்லை.

குருமூர்த்தியின் கருத்தை நாம் இப்படியும் புரிந்து கொள்ளலாம். பெண்மை என்பதை கன்னித்தன்மை (Virginity) என்று வைத்துக் கொண்டால் திருமணமான பெண்கள் அனைவருமே பெண்மையை இழந்தவர்கள் ஆகின்றார்கள். அதன் படி அவரது கட்சியில் இருக்கும் திருமணமான பெண்கள் யாருக்குமே கற்பு இல்லை என்றே அர்த்தம். இதை நாம் சொல்லவில்லை குருமூர்த்திதான் சொல்கின்றார். அவர் சொன்னதை எதிர்க்காமல் அதற்கு ஆதரவு கொடுத்ததால் பிஜேபியைச் சேர்ந்த பெண்கள் அவரது கருத்தோடு ஒன்றுபடுகின்றார்கள் என்பதாகவே நாம் புரிந்து கொள்கின்றோம். ஆண்களிடம் இருக்கும் ஆணாதிக்கத்தைவிட பெண்களிடம் செயல்படும் ஆணாதிக்கம்தான் மிக அபாயகரமானது. அவர்கள் தான் குருமூர்த்தி போன்ற சனாதன சங்கிகளுக்கு உந்துசக்தியாக இருப்பவர்கள். தன்னையோ தன் வீட்டுப் பெண்களையோ தீட்டு என்றோ, கற்பற்றவர்கள் என்றோ சொன்னாலும் பதவிக்காக அதைக் கண்டுகொள்ளாமல் இருப்பதால்தான் குருமூர்த்தி போன்றவர்களால் மிக எளிதாக தன் அருகில் பெண்களை வைத்துக்கொண்டே இது போன்ற கருத்தை வெளிப்படுத்த முடிகின்றது. இப்படி கண்டிக்காமல் இருப்பவர்களுக்கும் நிர்மலா தேவிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்பதுதான் உண்மை.

குருமூர்த்தியால் இதுபோன்ற கருத்தை துணிந்து வெளியிட முடிகின்றது. அவர் துக்ளக் பத்திரிகையின் ஆசிரியராகவும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஒரு கிளை அமைப்பான சுதேசி ஜாக்ரன் மஞ்சு என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளராகவும், டெல்லியில் இருந்து செயல்பட்டு வரும் வாய்ஸ் ஆஃப் இண்டியா (இந்தியாவின் குரல்) என்ற தீவிர வலதுசாரி வெளியீட்டகத்துடன் தொடர்பு கொண்டவராகவும், எல்லாவற்றுக்கும் மேலே ரிசர்வ் வங்கியின் இயக்குநர் குழுவிலும் இருக்கின்றார். ஆனால் அவரது நாறவாயை இது எதுவொன்றும் கட்டுப்படுத்தவில்லை. மாறாக இது எல்லாம் அவருக்கு தன்னுடைய சீழ்பிடித்த மூளையில் நாறிக் கிடக்கும் சனாதன சிந்தனையை வெளிப்படுத்தவே உதவியிருக்கின்றது.

நாய் வலுவாக குரைக்கின்றது என்றால் அதற்குப் பசிக்கின்றது என்பதாகப் புரிந்து கொள்ள வேண்டும். எனவே நாக்பூர் இதைப் புரிந்துகொண்டு நாயின் பசியைப் போக்க வேண்டும். இல்லை என்றால் இப்படி பொது அமைதிக்கு அடிக்கடி குந்தகம் விளைவித்துக் கொண்டு இருக்கும் நாயை மக்களே தண்டிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிடும்.

Pin It