என் பெயர் சத்யா.. 5த் ஸ்டாண்டர்ட் படிக்கிறேன்...

அங்கிள் நேத்து இராத்திரியில இருந்து எங்க அப்பா வீட்டுக்கே வரலை...அம்மா அழறா. அக்கா அழறா..

பாட்டி மயக்கம் போட்டு கீழே விழுந்துட்டா.

எதுக்கு அழறம்மான்னு கேட்டேன்.... அப்பா வீட்டுக்கு வரும் போது ட்ரெயின்ல குண்டு வெடிச்சதுல செத்து போயிட்டாராம்..

யாரும்மா குண்டு வச்சதுன்னு கேட்டேன்... "தீவிரவாதி"ன்னு மட்டும் அம்மா சொல்றா.

தீவிரவாதி அங்கிள் நீங்க எங்க இருக்கீங்க.... ஏன் அங்கிள் குண்டு வச்சீங்க?

எங்க அப்பா எனக்கு வேணும் இப்போ...

நாளைக்கு என்னையும் அக்காவையும் பீச்க்கு கடல்ல விளையாட

கூட்டிட்டு போறேன்னு சொன்னார்....

எங்க அப்பா எனக்கு வேணும் இப்போ...

அங்கிள் நீங்க ஸ்கூல்ல படிச்சதே இல்லையா?

"உயிர்களை கொல்வது பாவம்"ன்னு எங்க டீச்சர் சொல்லி தந்திருக்காங்க அங்கிள்..

உங்களுக்கு யாருமே சொல்லித் தரலையா அங்கிள்?

உங்களுக்கு இதயமே கிடையாதா அங்கிள்?

எங்க அம்மா அழறத பார்க்க பாவமா இருக்கு அங்கிள்...எங்க அப்பா திரும்பி வரவே மாட்டாரா அங்கிள்?

ஏன் இப்படி செஞ்சீங்க?

போன வாரம் நான் ஒரு நாய்குட்டிய கல்லால அடிச்சதுக்கு எங்க அம்மா என்னை திட்டினாங்க அங்கிள்...

நீங்க வெடிச்ச வெடிகுண்டால நிறைய பேர் செத்துட்டாங்களாம்... உங்க அம்மா உங்கள ஒண்ணுமே சொல்ல மாட்டாங்களா அங்கிள்?

நான் இரண்டு நாளா தூங்கவே இல்ல அங்கிள்...

எங்க அப்பா என் கைய புடிச்சுக்கிட்டே சிங்கம், புலி கதை நிறைய சொல்வாரு...கதை கேட்டாதான் நான் தூங்குவேன்..

இனி யாரு எனக்கு கதை சொல்வா?

அழுகை அழுகையா வருது அங்கிள்...

எனக்காக இனிமே உயிர்களை கொல்ல மாட்டேன்னு சத்தியம் பண்ணுங்க அங்கிள்....ப்ளீஸ்...

பாசமுடன்,
சத்யா.


கவலையுடன், 
- நிலாரசிகன்

Pin It